இதில் அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்த சச்சின் (30) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து கைது செய்தனர். இவர், ஹிமானியை செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அப்புறப்படுத்தியதை ஒப்புக் கொண்டார். ஹிமானியுடன் சச்சினுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சச்சினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், ஹிமானியுடன் நெருங்கிப் பழகி உள்ளார்.
ஹிமானியின் தாய், சகோதரர் சொந்த ஊரில் வசித்த நிலையில், ஹிமானி மட்டும் தனது படிப்புக்காக விஜய் நகரில் பூர்வீக வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் சச்சின் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். கடந்த 27ம் தேதி சச்சின் வீட்டிற்கு வந்த போது ஹிமானியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சார்ஜர் வயரால் ஹிமானியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரது நகை, லேப்டாப் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹிமானியின் மொபட்டிலேயே தனது கடைக்கு சென்று வைத்துள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து சூட்கேசில் சடலத்தை மறைத்து ஆட்டோவில் ஏறி சாம்ப்லா பஸ் நிலையம் அருகே சென்று அங்கு சூட்கேசை வீசி உள்ளார். ஹிமானி தன்னிடம் அதிக பணம் வாங்கியதாகவும் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக சச்சின் கூறி உள்ளார். இது நம்பும்படியாக இல்லை என்பதால், அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
The post சூட்கேசில் சடலமாக வீசப்பட்ட அரியானா காங். பெண் நிர்வாகி கொலையில் ஆண் நண்பர் கைது: பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.
