நாகர்கோவில், மார்ச் 1: செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் உள்ள 4 மரச்செக்குகளை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அழகு மீனா விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக்கூட்டு மையத்தில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் 4 மரச்செக்குகள் உள்ளன.
இவை தற்பொழுது பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த மரச்செக்குகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து நடத்த விருப்பம் உள்ளவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை வேளாண்மை துணை இயக்குநர், வேளாண் வணிகம், நாகர்கோவில் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் என கூறி உள்ளார்.
The post தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் உள்ள 4 மர செக்குகளை வாடகைக்கு விட முடிவு appeared first on Dinakaran.
