அதன்படி, நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த 4 பேர், அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தினேஷ் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷ் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே பேட்மிண்டன் பயிற்சியாளர் சரமாரி வெட்டி கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
