இந்த கோல்டன் விசா திட்டத்தை போல பல நாடுகளும் வேறு சில சிறப்பு விசா திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் நாடான கிரேக்கத்தில் 2 அரை லட்சம் யூரோக்கள் அதாவது 2 கோடியே 27 லட்சம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தக்க குடியுரிமையை பெற முடியும். இத்தாலியில் 2 கோடியே 27 லட்சம் முதல் ரூ.18 கொடியே 18 லட்சம் வரையும் முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமையும், ஐரோப்பாவின் ஷாங்கான் பகுதிக்கு விசா இல்லாமல் செல்வதற்கான அனுமதியும் கிடைக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்தபட்சம் 4 கோடியே 75 லட்ச ரூபாய் முதலீடு செய்து கோல்டன் விசாவை பெற்று கொள்ளலாம்.
கெனடாவில் 2 கோடியே 5 லட்சம் முதலீடு செய்வோருக்கு சிறப்பு விசா வழங்கப்படுவதுடன் சீனா, ரஷ்யா, சிங்கப்பூர்,விட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டில் 2 கோடியே 18 லட்சம் ரூபாயும் செயின்ட் லூசியாவில் 2 கோடியே 9 லட்சம் ரூபாயும். கரீபியன் நாடான டொமினிகாவில் 1 கோடியே 74 லட்சம் ரூபாயும் முதலீடு செய்தால் குடும்பத்தினர் அனைவருக்கும் குடியுரிமை பெறலாம். தாய்லாந்தில் 16 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் வரை குடியுரிமை பெற முடியும். ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் வசிக்க அனுமதிப்பதுடன் வரி சலுகைகளையும் வாரி வழங்குகிறது. இந்தோனேசியாவில் 10 மில்லியன் டாலர் 87 கோடியே 27 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 10 ஆண்டுகளுக்கான விசாவை பெறலாம்.
The post அமெரிக்காவில் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்: நடைமுறையில் உள்ள நாடுகள் விவரம் appeared first on Dinakaran.
