நாசரேத்- தூத்துக்குடி இடையே புதிய பஸ்கள் இயக்க வேண்டும்

நாசரேத், பிப். 28: நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்தில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புறப்பட்டு நாலுமாவடி, குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு செல்கின்றன. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து பஸ்கள் புறப்பட்டு இதே மார்க்கமாக நாசரேத்திற்கு வருகின்றன.

இந்நிலையில் நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் ஒரு சில பஸ்கள் தவிர மற்ற அனைத்தும் பஸ்களும் பழைய பஸ்களே இயக்கப்படுகிறது. குறிப்பாக நாசரேத்தில் இருந்து காலை 8.25 மணிக்கு தடம் எண் 146 அரசு புதிய பஸ் புறப்பட்டு நாலுமாவடி, குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு சென்று திரும்புகின்றன. இந்த பஸ் அடிக்கடி மாயமாவதோடு புதிய பஸ்சுக்கு பதிலாக பழைய பஸ் இயக்கப்படுகிறது. இதனால் நாசரேத், மூக்குப்பீறி, நாலுமாவடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மிகவும் சிரப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் -தூத்துக்குடி, தூத்துக்குடி- நாசரேத் இடையே புதிய பஸ்களாக இயக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாசரேத்- தூத்துக்குடி இடையே புதிய பஸ்கள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: