பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்த ஏவுகணையின் பரிசோதனை நேற்று முன்தினம் நடந்தது. இந்த சோதனையில் ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சத்தை நிரூபித்துள்ளன. மேலும் ஏவுகணை அதன் அதிகபட்ச வரம்பில் ஒரு சிறிய கப்பல் இலக்கை நேரடியாக தாக்கியுள்ளன. ஏவிய பிறகும், இலக்கை மாற்றும் வசதி கொண்ட இந்த ஏவுகணையில் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் உள்ளது. சோதனையில் இந்த ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது. இந்த சோதனைக்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து appeared first on Dinakaran.
