வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் நீடாமங்கலம் வழியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் வந்து நீடாமங்கலம் வழியாக ஆலங்குடி குரு கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா, வேதாரண்யம், கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க கோவில் வெண்ணி, நகர், ஆதனூர், கோண்டியாறு, நீடாமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரி உள்ளிட்ட நீர் சத்து பொருள்கள் விற்பனையாவதை வாங்கி பருகிச்செல்கின்றனர்.
பனை நுங்கு காலமும் தொடங்கியதால்,அதுவும் பல இடங்களில் விற்பனைக்கு வரஉள்ளது.இந்தப் பகுதியில் வரும் பெரும் பாலான மக்கள் கடைகளில் விற்கப்படும் பானங்களை விட விவசாயிகள் இயற்கையாக சாகுபடி செய்து சாலைகளில் விற்கப்படும் தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரி, நுங்கு போன்ற போருட்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு நீடாமங்கலத்தில் தர்ப்பூசணி, இளநீர் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.
