அன்னூர், பிப்.22: கோவில்பாளையம் அருகே வெள்ளானைப்பட்டி கிராமத்தில் உள்ள கலை விரும்பிகள் இணைந்து சிறுவர், சிறுமியர் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் கலை திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த கலை திருவிழாவில் சடுகுடுப்பான், கண்ணாமூச்சி, கோலிகுண்டு, காசிக்குழி, பம்பரம், கில்லி, சூரைப்பந்து, குலைகுழையாய் முந்திரிக்காய், கும்மி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நான்கு பிரிவிலாக நடந்தன.
இதில், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று அசத்தினர். இதை அடுத்து புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், முன்னோடி விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
The post பாரம்பரிய கலை திருவிழா: சிறுவர் சிறுமியர் பங்கேற்பு appeared first on Dinakaran.
