மக்களவை காங்கிரஸ் துணை தலைவரான கவுரவ் கோகாயின் மனைவி எலிசபெத் இங்கிலாந்தை சேர்ந்தவர். இவருக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனத்துடன் தொடர்பு உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் பாஜவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக கவுரவ் கோகாய் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பது குறித்து பாஜ விசாரணையை நடத்த முடியும். ஆனால் அனைத்து அசாம் மக்களுக்கும் உண்மையான காரணம் என்ன என்பது தெரியும். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது பதவியை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறார். அசாம் மக்களிடம் இருந்து நீதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஹிமந்தா பிஸ்வாவுக்கு தேர்தல் தோல்வி பயம்: கோகாய் பதிலடி appeared first on Dinakaran.
