திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை, புத்தாநத்தம், வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெடி சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. வெடி சத்தத்துடன் அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நின்றனர். வீட்டின் ஓடுகள் மற்றும் ஐன்னல் கதவுகள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.