புதுடெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘யூடியூப், பேஸ்புக், எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடகதளங்களில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த வதந்திகள் பரப்பப்படுகிறது. இவை ஆதாரமற்றவை. மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பீதியை உருவாக்கும் தவறான நோக்கம் கொண்டவை. இது குறித்து சிபிஎஸ்இ தீவிரமாக கண்காணித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும். எனவே, மாணவர்கள், பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் ’’ என்றார்.
The post சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததா? ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.