பொன்னமராவதி,பிப்.12: பொன்னமராவதி சிக்கந்தர் பக்கீர் ஒலியுல்லா தர்காவில் 40ம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமரகண்டன் வடகறையில் உள்ள சிக்கந்தர் பக்கீர் ஒலியுல்லா தர்காவில் 40ம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தர்கா அறங்காவலர் முஹம்மது சுல்தான் தலைமை வகித்தார். ஜமாத்தலைவர் சாகுல் ஹமீது, ஜமாத் நாட்டாமை அப்பாஸ் செயலாளர் ஷேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஜமாத் துணை செயலாளர் சரிப் பொருளாளர் காதர்மீரான், அப்துல்சலாம், முகமது காசிம். அக்கீம், ஷாஜகான், எஸ்.எம்.அப்பாஸ், இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post பொன்னமராவதி சிக்கந்தர் பக்கீர் ஒலியுல்லா தர்காவில் சந்தனம் பூசும் விழா appeared first on Dinakaran.
