பூந்தமல்லி: சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்திருந்தனர். ஆனால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் நீண்டநேரமாக காத்திருக்க வைத்ததாக தெரிகிறது. மேலும் காலை 7 மணி முதல் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த நோயாளிகள், மருத்துவ பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் கால் வலிக்காக சிகிச்சை பெற வந்திருந்த நடிகர் கஞ்சா கருப்பும் பல மணிநேரம் காத்திருந்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த கஞ்சா கருப்பு, பொதுமக்களுடன் இணைந்து டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவர் திடீரென மக்களுடன் மருத்துவமனை வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
The post நோயாளிகள் பலமணி நேரம் காத்திருப்பு: போரூர் அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் appeared first on Dinakaran.