ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இடைத்தேர்தலில் 2,27,237 பேர் வாக்களிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.