சிங்கம்புணரியில் பிப்.19ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

சிவகங்கை, பிப்.5: சிங்கம்புணரியில் பிப்.19அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெற உள்ளதையடுத்து பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அனைத்து உயர் அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வர்.

இதனடிப்படையில் பிப்.19அன்று ஒரு நாள் முழுவதும் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சிங்கம்புணரி வட்டத்தில் இருப்பார்கள். எனவே பிப்.13 முதல் பிப்.17 வரை பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பான மனுக்களை சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி அலுவலகம், விஏஓ அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிங்கம்புணரியில் பிப்.19ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: