புதிய வருமான வரி மசோதா பற்றி கருத்து கூறுங்கள்: தொழில்துறையினருக்கு நேரடி வரிகள் வாரியம் அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் அது குறித்து தொழில்துறையினர் கருத்து தெரிவிக்க வேண்டுமென மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் வலியுறுத்தி உள்ளார். கடந்த 60 ஆண்டாக அமலில் உள்ள பழமையான வருமான வரி சட்டம் 1961ஐ மாற்றுவதற்கான புதிய வருமான வரி மசோதா அடுத்த ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புதிய மசோதா சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் அது குறித்து தொழில்துறையினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அவை பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

The post புதிய வருமான வரி மசோதா பற்றி கருத்து கூறுங்கள்: தொழில்துறையினருக்கு நேரடி வரிகள் வாரியம் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: