12 சுற்றுகள் முடிவில் குகேஷும், பிரக்ஞானந்தாவும் தலா 8.5 புள்ளிகள் பெற்று சம நிலையில் இருந்தனர். 13வது சுற்றில் குகேஷ், சக இந்தியர் அர்ஜுன் எரிகைசியிடமும், பிரக்ஞானந்தா, ஜெர்மன் வீரர் வின்சென்ட் கீமரிடமும் தோல்வி அடைந்தனர். 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் – பிரக்ஞானந்தா சம புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலில் இருந்ததால் அவர்கள் இடையே டைபிரேக்கர் போட்டி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
இதில் அபாரமாக ஆடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முன்னாள் உலக சாம்பியன், இந்தியாவை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் இப்பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியர் பிரக்ஞானந்தா. டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post டாடா ஸ்டீல் செஸ் பிரக்ஞானந்தா சாம்பியன்: டைபிரேக்கரில் குகேஷ் தோல்வி appeared first on Dinakaran.
