இரவில் அரசு பஸ் மக்கர்; மக்கள் தவிப்பு

 

கோவை: கோவை உக்கடத்தில் இருந்து நீலம்பூர் நோக்கி நேற்று இரவு அரசு டவுன்பஸ் சென்று கொண்டிருந்தது. டவுன்ஹால் பஸ் ஸ்டாப் அருகே அந்த பஸ் பழுதாகி நின்றுவிட்டது. இதை தொடர்ந்து பழுது சரி செய்ய போக்குவரத்து கழகத்திலிருந்து மெக்கானிக் மற்றும் வாகனம் வரவழைக்கப்பட்டது. பஸ் பழுதின் காரணமாக பயணிகள் தவிப்படைந்தனர். சில நிமிட நேரம் காத்திருந்து மாற்று அரசு பஸ்சில் நீலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். பழுதான அரசு சில நாட்களுக்கு முன் கோவைக்கு வந்த தாழ்தள சொகுசு பஸ்.

இந்த பஸ் நகரின் குறுகலான பகுதிகளில் இயக்குவதற்கு சிரமமாக இருப்பதாக டிரைவர்கள் புலம்பி வருகின்றனர். இன்ஜின் பகுதி பஸ்சின் பின் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதில் ஏர் லாக் காரணமாக பஸ் பழுதாகி நின்று விட்டதாக தெரிகிறது. புதிய பஸ் மக்கர் செய்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் ஆகியும் பஸ் பழுது சரி செய்யப்படவில்லை. நீண்ட தூரம் இயங்கும் புதிய டவுன் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post இரவில் அரசு பஸ் மக்கர்; மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: