பெத்திகுப்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்; ரூ2 கோடியில் நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 139 பயனாளிகளுக்கு ரூ1.94 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி வட்டாட்சியர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் சிறப்ப அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். தொடர்ந்து விழாவில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை, தொடக்கக் கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகளை எம்எல்ஏ மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து, 76 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 30 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, 8 பயனாளாகளுக்கு விதவை மகள் திருமண நிதியுதவி, 16 பயனாளிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் தொகை, 4 பயனாளிக்கு இலவச தையல் எந்திரம் என மொத்தம் 139 பயனாகளுக்கு ரூ1.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்த், வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், சுதா, சிவகாமி, பெத்திக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி ஆனி, உதவி இயக்குனர் பிரதீப் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்துறை) மோகன், வேளாண்துறை துணை இயக்குனர் வேதவல்லி, துணை இயக்குனர் டெல்லி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post பெத்திகுப்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்; ரூ2 கோடியில் நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: