சென்னை: பத்ம பூஷண் விருது பெறும் நடிகர் அஜித்குமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்தவர் அஜித். நடிகை சோபனாவும் பத்ம பூஷண் விருது பெறுவதில் பேரானந்தம் கொள்கிறோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.