செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

செங்கல்பட்டு: பொது விநியோகத்திட்டத்தின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (25ம் தேதி) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், செங்கல்பட்டு வட்டம் தென்மேல்பாக்கம் கிராமம், செய்யூர் வட்டம் கயப்பாக்கம் கிராமம், மதுராந்தகம் வட்டம் மாம்பாக்கம் கிராமம், திருக்கழுக்குன்றம் வட்டம் நெய்குப்பி கிராமம், திருப்போரூர் வட்டம் அருங்குன்றம் கிராமம், வண்டலூர் வட்டம் நந்திவரம் கிராமம் ஆகிய இடங்களில் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல்அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: