கடந்த வாரம் கூட இப்படத்தின் போட்டோ ஷூட் நடந்தது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மிஷ்கின், ரஜினி – லோகேஷ் படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதில்; “லோகேஷ் அடுத்தது ரஜினிகாந்துடன் படம் பண்றாரு.
இதுதான் ரஜினியின் கடைசி படமா இருக்கும்னு சொல்றாங்க. ஆனா எந்த அளவிற்கு அது உண்மை என்று தெரியவில்லை. அந்த படத்தை லோகேஷ் பண்றது ரொம்ப பெருமையா இருக்கு” என பேசியுள்ளார். இந்த விஷயம் தற்போது காட்டு தீ போல் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.