சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான்லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வாணையம் ஓஎம்ஆர் விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படமானது www.tnpsc.gov.in “OMR Answer Sheet- Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம் 1ல் பகுதி 1ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம், பக்கம் 2ல் பகுதி 1ன்கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே. தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் appeared first on Dinakaran.
