ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்க உள்ளன. இந்த போட்டிகளில் டெல்லி அணிக்காக 7 ஆண்டுக்கு பின் ஆடப் போவதை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உறுதி செய்துள்ளார். குரூப் டி பிரிவில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக ஆடும் டெல்லி அணியில் பண்ட் இடம்பெற உள்ளார். ரஞ்சி கோப்பை போட்டியில் 12 ஆண்டுக்கு பின், டெல்லி அணிக்காக இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லியும் இடம் பெறும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் ஆடும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய அணியில் இடம்பெறாத பட்சத்தில் உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகளில் விளையாடும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post 7 ஆண்டுக்கு பின் ரஞ்சியில் ஆடும் ரிஷப் பண்ட் appeared first on Dinakaran.