தமிழகத்திற்கு வரிப்பகிர்வாக ரூ. 7057.89 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆந்திராவுக்கு ரூ.7002 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.6,310 கோடியும், கேரளாவுக்கு ரூ.3,330 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.13,583 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.10,930 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.7834 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ. 10,427 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ.31,039 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.13,017 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வில், வழக்கம் போல் பாஜக ஆளும் உ.பி, ம.பி, பீகாருக்கு 40% நிதியும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களித்து வரும், தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களுக்கு வெறும் 15% நிதியும் வழங்கியுள்ளது ஒன்றிய அரசு, இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா? அல்லது ஓரவஞ்சனையா?.” இவ்வாறு தெரிவித்தார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாருக்கு ரூ.62,024 கோடி வரிப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களுக்கு ரூ.27,336 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post உ.பி, ம.பி, பீகாருக்கு 40% நிதி, தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களுக்கு வெறும் 15% வரிப் பகிர்வா? :அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி appeared first on Dinakaran.
