அ.வல்லாளபட்டி மக்களின் உறுதியான கருத்தை டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முழுமையாக ஏற்று வழிமொழிகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியதற்காக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதையும், டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து போராடி வந்ததையும் ஆண்டுக்கணக்கில் கண்டுகொள்ளாமல் இருந்த பாஜவின் அரசியலும், வேதாந்தா நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளும் எளிதாகக் கடந்துவிடக் கூடிய ஒன்றல்ல என்பதை தமிழ்நாடு மக்களும், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் அறிந்தே வைத்துள்ளோம். எனவே அண்ணாமலை வெறுமனே வாய்வார்த்தையில் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பாமல், மத்தியில் ஆட்சியில் உள்ள தனது கட்சி பிரதமரான நரேந்திர மோடியை வலியுறுத்தி சட்ட அங்கீகாரம் தரும் எழுத்துப்பூர்வமான டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பு வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசும், மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் மண்டலமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post லண்டனில் இருந்து வந்ததும் திட்டத்தை வரவேற்றுப் பேசிய அண்ணாமலையின் வெற்று வாக்குறுதியை நம்பமுடியாது: டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டமைப்பு அறிக்கை appeared first on Dinakaran.
