ராணுவத்துறையில் வீரமரணமடைந்த படைவீரரின் வாரிசுக்கு கருணைத் தொகை வழங்கினார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

 

சென்னை: 27 MECH INF படைப்பிரிவில் பணிபுரிந்து வந்த இளநிலை படை அலுவலர் Nb Sub (கா/செ) P ஸ்டேன்லி என்பவர் படைப்பணியின் போது 09.10.2024 அன்று லே(Leh) எல்லை கட்டுப்பாட்டு பகுதி ‘OP SNOW LEOPARD(Leh)-ல் வீரமரணமடைந்தார்,

பொது (இராணுவம்)த் துறை, நாள். 19.04.2023-ன் படி வீரமரணமடைந்த படைவீரரின் வாரிசுதாரரான S. மேனகா (மனைவி) அவர்களுக்கு 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் நேரில் அழைத்து கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூபாய் 40 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, திரு கி. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அரசு கூடுதல் செயலாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: