ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடையே நடத்திய ஆய்வில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளனர். அதில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பொருளாதார அழுத்தங்கள், புவிசார் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்கள் போன்றவை தொழில்துறை மாற்றங்களுக்கான முக்கிய காரணிகளாக அமைகிறது. செயற்கை தொழில்நுட்பம், பெரிய தரவுகள், சைபர் செக்யூரிட்டி போன்றவற்றிற்கான திறன் தேவைகள் விரைவான வளர்ச்சியை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக மாறி வரும் வேலை சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் மனித திறன் இரண்டையும் இணைப்பது மிக முக்கியமானதாக இருக்கும். ஹெல்த் கேர் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் 2030ம் ஆண்டுக்குள் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் வளர்ந்து வரும் துறைகளான AI-யால் graphic designer உள்ளிட்ட சிலருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். விவசாய தொழிலாளர்கள், டெலிவரி ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட துறைகளில் 2030 ஆண்டுக்குள் அதிகமான வேலை வளர்ச்சியை காணும். ஹெல்த் கேர் துறைகளில் மருத்துவ பாண்டியர்கள் போன்ற பணிகள் மற்றும் கல்வி பணிகளிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுவர். அதில் 41% ஆட்டோமேஷன் காரணமாக பணியாளர்களை குறைக்க திட்டமிடும் வேளையில் 77% தங்கள் பணியாட்களின் திறன்களை தேவைக்கு ஏற்றவாறு அதிகரிப்பர்.
The post 2030-க்குள் 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. World Economic Forum அறிக்கை வெளியீடு!! appeared first on Dinakaran.