இதனை கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்தார். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது ஒருபோதும் நடக்காது என்று கூறியிருந்தார் ட்ரூடோ. மேலும், கனடா அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து, கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில், மீண்டும் ட்ரூடோவை கேலி செய்துள்ள எலான் மஸ்க், ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை என்று விமர்சித்துள்ளார். எனவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
The post அமெரிக்கா – கனடா இடையே அதிகரிக்கும் வார்த்தை மோதல்கள்: ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்!! appeared first on Dinakaran.