அப்போது, சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3ம் தேதி அவருடன் சென்றார். புகாரின் பேரில், போலீசார் நேற்று முன்தினம் திருவாலங்காடு பகுதியில் தங்கியிருந்த சிறுமி மற்றும் சிறுமியின் காதலனான ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த டேனி (எ) சதீஷ்குமாரை (19) பிடித்தனர்.
சிறுமியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சிறுமி 2 வருடத்திற்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்த போது சிறுமி கர்ப்பமாக இருந்த காலத்தில், மருத்துவமனையில் போலியான வேறு ஒரு நபரின் ஆதார் கார்டை கொடுத்து சிறுமி வயதை மறைத்து குழந்தை பெற்றுக் கொண்டதும், அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது சதீஷ்குமார் என்பவரை காதலித்து அவருடன் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து தற்போது சிறுமியை விட்டு பிரிந்து வாழும் முதல் கணவர் பிரகாஷ் மற்றும் தற்போது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமி இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்த போது பெரியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதா அல்லது காதல் திருமணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முதல் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சிறுமி ஓட்டம்: போலி ஆதார் மூலம் பிரசவம் பார்த்தது அம்பலம், கணவன், கள்ளக்காதலன் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.