அதில், மாதவரம் பகுதியை சேர்ந்த பாட்ஷா (27), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (23) என்பதும், இவர்கள் மாதவரத்தில் உள்ள அபிராமி இண்டஸ்ட்ரீஸ் என்ற இடத்தில் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதும், தற்போது விற்பனை செய்வதற்காக குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 800 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 2 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
22 கிலோ கஞ்சா பறிமுதல்: பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை, சந்தேகத்தின் பேரில், பிடித்து சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் விலை உயர்ந்த 22 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அந்த வாலிபர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த உடி சத்யபாபு (38) என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post காரில் கடத்தி வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.