வேளச்சேரி தொகுதி முழுவதும் புதிய கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசுகையில், மழைநீர் வடிகால் அமைத்து, மிகப் பெரிய அளவிற்கு தமிழ்நாடு முதல்வருக்கு நல்ல பெயரை ஈட்டிக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அதேபோல், கழிவுநீர் வடிகாலையும் அமைத்துத் தர வேண்டும். ஏனென்றால், 1975க்கு பிறகு வேளச்சேரியில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. எல்லா இடங்களிலுமே பொதுவாக தண்ணீர் நிற்கிறது. என் தொகுதி முழுவதும் கழிவுநீர் வடிகால் புதிதாக அமைத்துத் தர வேண்டும், என்றார்.

இதற்கு பதில் அளிளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், 2,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு சென்னை மாநகராட்சியிலே அனைத்து இடங்களிலுமே ஆகாயத் தாமரை அகற்றப்பட்டு கிட்டத்தட்ட வாய்க்கால் எல்லாம் தூர்வாரப்பட்டிருக்கிறது. எனவே, மழைநீர் வடிகால் கட்டுவது போல கழிவுநீர் வாய்க்கால்களை கட்டுவதற்குரிய நடவடிக்கைகளை புதிய திட்டமாக இப்போது சொல்லியிருக்கிறீர்கள். அதைக் கவனத்தில் கொண்டு அது எவ்வாறு, எவ்வளவு சாத்தியப்படும், நிதிநிலை எப்படி இருக்கிறது, என்பதையெல்லாம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

The post வேளச்சேரி தொகுதி முழுவதும் புதிய கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: