இறச்சகுளம் நாவல்காடு சாலை ₹90 லட்சத்தில் சீரமைப்பு

நாகர்கோவில், ஜன.10: இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் அழகுமீனா, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சி பணிகளை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ் ₹90 லட்சம் மதிப்பில் நாகர்கோவில் – துவரங்காடு சாலையில் இறச்சகுளம் முதல் நாவல்காடு வரை 1.6 கி.மீட்டர் நீளத்திலும், 7 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இத்தார்சாலை தரத்தினை ஆய்வு செய்து, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அரவிந்த், சாலை ஆய்வாளர் அருள், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post இறச்சகுளம் நாவல்காடு சாலை ₹90 லட்சத்தில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: