தேங்காய்ப்பால் ஃபுட்டிங்

தேவையானவை:

தேங்காய் துருவல் – 2 கப்,
ஏலக்காய் – 2, தண்ணீர் – 2 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
சோள மாவு – 1/4 கப்.

செய்முறை:

தேங்காய் துருவல், ஏலக்காய், தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் தேங்காய்ப்பாலை சேர்த்து அதில் சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து விட்டு தனியே வைக்கவும். மீதமுள்ள தேங்காய்ப்பாலில் சோள மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். சர்க்கரை கலவையுடன் உள்ள தேங்காய்ப்பாலை மிதமான தீயில் லேசாக கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு தேங்காய்ப்பால் கலவையை சேர்த்து கட்டியாகாமல் கிளற வேண்டும். இனிப்பு தேவை என்றால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

The post தேங்காய்ப்பால் ஃபுட்டிங் appeared first on Dinakaran.