தாமரைப்பூ சர்பத்

தேவையானவை:

உலர்ந்த வெண்தாமரைப்பூ – 800 கிராம்,
சர்க்கரை – 500 கிராம்,
சுத்தமான தண்ணீர் – 2 லிட்டர்,
பன்னீர் – 50 கிராம்.

செய்முறை:

உலர்ந்த வெண்தாமரைப் பூக்களைத் தண்ணீரில் சுமார் 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பிலேற்றி நன்கு ேவக வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் அடிப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும். வடிகட்டி எடுத்த நீருடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பிலேற்றிப் பாகுக் காய்ச்சும் போது பன்னீரையும் அதில் சேர்த்துக் கொள்ளவும். தேன் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கிச் சற்று ஆற விட்டு பாட்டில்களில் ஊற்றிக் கார்க்கிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.

The post தாமரைப்பூ சர்பத் appeared first on Dinakaran.