பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரிம்

தேவையான பொருட்கள்:

விப்பிங் கிரீம் – 1கப்
சர்க்கரை பவுடர் – 1/4 கப்
பால் பவுடர் – 2டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப்
பட்டர் ஸ்காட்ச் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் – 1 டீஸ்பூன்
மஞ்சள் புட்கலர் (optional) – 1 டீஸ்பூன்
பிரவுன் சுகர் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

*ஒரு தவாவில் சர்க்கரை சேர்த்து சூடாகவும். சர்க்கரை உருகி பொன்னிறமாக மாறும் வரை கலக்கவும். சர்க்கரை உருகியதும் பட்டர், நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கலந்து எடுத்து நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.

*முந்திரி, கேரமல் சூடாரியவுடம் எடுத்து பொடித்து தயாராக வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பவுடர் செய்துகொள்ளவும்.

*தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

*ஒரு பௌலில் விப்பிங் கிரீம் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

*பீட் செய்த கிரீமுடன் பால் பவுடர், கன்டன்ஸ்டு மில்க், பிரவுன் சுகர் சேர்த்து ஒரு நிமிடம் பீட் செய்து இறக்கவும்.

*பின்னர் அத்துடன் பொடித்த பட்டர் ஸ்காட்ச் பவுடர், பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து எடுத்து குறைந்தது ஐந்து மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

*பின்னர் எடுத்து ஐஸ் கிரீம் பௌலில் சேர்த்து மேலே பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ், சாக்கோ சிப்ஸ்களை தூவி அலங்கரிக்கவும்.

*இப்போது மிகவும் அருமையான சுவையில் பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சுவைக்கத் தயார்.

The post பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரிம் appeared first on Dinakaran.