ஜெயங்கொண்டம், ஜன.9: அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சீராளன் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் நகர காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலையான போலீசார் கும்பகோணம் சாலையில் விபத்தை குறைக்கும் வகையில் கழுவந்தொண்டி பைபாஸ் சாலை அருகில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இருசக்கர வாகன மெக்கானிக்கை வைத்து இலவசமாக பிரேக் செக்கிங் செய்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், வாகன ஓட்டிகள் இடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது, வாகனத்திற்கான பதிவுச் சான்று காப்புச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் வைத்திருக்க வேண்டும், சான்றுகள் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை செலுத்தினாலும், ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும் ஆகையால் அவசியம் வாகனத்தில் பதிவு சான்று காப்புச் சான்று அவசியம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் .
The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: காவல்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.