டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டப்பேரவைக்கு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்களால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது கூட்டம் நடைபெற்றது. நேற்று 3ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள், மதுரை மாவட்டம் மேலூரில் அமையவிருக்கும் டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து, வெள்ளை நிற முகக் கவசத்துடன் (மாஸ்க்) வந்தனர். முகக் கவசத்தில் டங்கஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக ‘டங்கஸ்டன் தடுப்போம் – மேலூர் காப்போம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை கண்டித்து யார் அந்த சார்? பேட்ஜையும் அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்க்குடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.