இதன் மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்களை கடந்த 3ம் தேதி முதல் ஊழியர்கள் வீடுவீடாக சென்று விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள (கடை எண் : 11) நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர்.
தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.தற்போது வரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்களை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சிலர் வெளியூர்களுக்கு சென்று இருப்பதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய டோக்கன்களை அந்தந்த ரேஷன் கடை மூலமாகவும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 13ம் தேதி வரை பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் டோக்கன்களில் உள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.
The post சைதாப்பேட்டை 169-வது வார்டில் நாளை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!! appeared first on Dinakaran.