வேலூர் எம்பி கல்லூரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

வேலூர்: வேலூர் எம்பி கதிர்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர்.  வேலூர் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் உறவினரான பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் தாமோதரன் வீடு ஆகிய 4 இடங்களில் கடந்த 3ம் தேதி. 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனை கடந்த 5ம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் சோதனை நடத்துவதற்காக மதியம் 1 மணியளவில் அமலாக்கத்துறையினர் காட்பாடி காவல் நிலையத்தில் கடிதம் அளித்தனர். இதை தொடர்ந்து பகல் 1.15 மணியளவில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், வேலூர் எம்பிக்கு சொந்தமான கல்லூரியில் நுழைந்தனர். உடனடியாக நுழைவு கேட் மூடப்பட்டது. இதனால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post வேலூர் எம்பி கல்லூரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: