2047ல் அதானி, அம்பானி வீடாகத்தான் இந்தியா இருக்கும்: சீமான் தாக்கு

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினால் இந்தியாவை துண்டு துண்டாக பிளவுபடுத்தவே ஒன்றிய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்த துடித்து வருகிறது.

இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் போன்ற கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுப்பதன் மூலம் இந்தியா எந்த ஒரு வளர்ச்சியும் கண்டிடாது என எல்.முருகன் குதர்க்கமாக பேசி வருகிறார். வாடகை தாய் என்ற பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நாடாக இயங்கி வருகிறது இந்தியா. இந்தியாவை ஒன்றிய அரசு ஏற்கனவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கூறுபோட்டு விற்றுவிட்டது. 2047ல் இந்தியா வல்லரசு நாடாக இருக்காது. அதானி, அம்பானி வீடாகத்தான் இருக்க முடியும். கார்ப்பரேட் ஆதிக்கம் இந்தியாவில் அதிகம் நீடித்து வருகிறது. இதுதான் ஒன்றிய அரசின் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.

The post 2047ல் அதானி, அம்பானி வீடாகத்தான் இந்தியா இருக்கும்: சீமான் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: