ஜிம்கானா கிளப் அருகே கூவம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை: உடலை தேடும் பணி தீவிரம்

சென்னை: அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகே கூவம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகே நேற்று காலை அதிகாலை 4.30 மணிக்கு, நடந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். இதை கவனித்த சாலையில் சென்ற முத்தையால்பேட்டையை சேர்ந்த அரி என்பவர், பல்லவன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்களிடம் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி, திருவல்லிக்கேணி போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்படி, போலீசார் உயர் நீதிமன்ற தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கூவம் ஆற்றின் சேற்றில் சிக்கியுள்ள பெண்ணை தேடி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (54), வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, மது பழக்கம் உள்ளதால், அடிக்கடி மனைவி வடிவுடன் (50) சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல், போதையில் மனைவியிடம் சண்டை போட்டு அடித்துள்ளார். இதில் கோபமடைந்த வடிவு அங்கிருந்து உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்று பார்த்தபோது மூர்த்தி தூக்கில் தொங்கியது தெரிந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வடிவுக்கு தகவல் கொடுத்தனர். வீட்டுக்கு வந்த வடிவு கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, ராயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

The post ஜிம்கானா கிளப் அருகே கூவம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை: உடலை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: