போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: போகிப் பண்டிகையை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றுசென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, பிளாஸ்டிக் டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதன் மூலம் காற்று மாசு அடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள பிளாஸ்டிக் டயர்கள், பழைய துணிகள் மற்றும் இதரப் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றை தனியாக சேகரித்து தங்களது இல்லங்களுக்கு குப்பை சேகரிக்க வரும் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: