யுஜிசி அறிவிப்புக்கு எதிர்ப்பு அறிக்கை நகலை எரித்து த.பெ.தி.க போராட்டம்

சென்னை: பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவுசெய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரால் பரிந்துரைக்கப்படுபவர் குழுவின் தலைவராகவும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பர். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார். புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பட்டம் செல்லாது, மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் மற்றும் ஆன்லைன் வழியான கல்விக்கு தடை ஆகிய யுஜிசியின் புதிய விதிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநில சுயாட்சிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தமிழகத்தில் உயர் கல்வியில் முன்னிலை வகிக்கும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. சட்டரீதியாக போராடும் என எனவும் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் யுஜிசியின் இந்த புதிய அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யுஜிசியின் அறிக்கை நகலை எரித்தும், கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

The post யுஜிசி அறிவிப்புக்கு எதிர்ப்பு அறிக்கை நகலை எரித்து த.பெ.தி.க போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: