பாட்னா தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கேரளாவை சேர்ந்த பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்துள்ளது.

அதே போல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற பரிந்துரைத்தது. தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதேவை மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

 

The post பாட்னா தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: