கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வட்டக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் கோரை புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோரை புற்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீய ணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? எப்படி தீப்பிடித்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கன்னியாகுமரியில் தீப்பிடித்து எரிந்த புல்புதர்கள் appeared first on Dinakaran.