சாலையோர விவசாய கிணற்றால் விபத்து அபாயம்: தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை


மேல்மலையனூர்: வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாதேவி மங்கலத்தில் இருந்து இல்லோடு செல்லும் சாலையின் ஓரமாக உள்ள திறந்த வெளி விவசாய கிணற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை ஓரம் உள்ள திறந்த வெளி கிணற்றில் தடுப்பு சுவர் எதுவும் இல்லாததால், அதில் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த விவசாய கிணறுக்கு தடுப்பு சுவர் அமைத்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோர விவசாய கிணற்றால் விபத்து அபாயம்: தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: