துணை பிரதமரான அவர் அமைச்சரவையிலிருந்து விலகியது ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. லிபரல் கட்சிக்கு ஆதரவு அளித்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் நாடாளுமன்றத்தில் ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அது தோல்வியில் முடிந்தது. இதுமட்டுமின்றி, வரும் அக்டோபரில் தேர்தல் நடக்க உள்ளநிலையில், மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், லிபரல் கட்சி தோல்வியை சந்திக்கும் என பலரும் கூறி உள்ளனர். இதனால் தனது செல்வாக்கு தொடர்ந்து சரிவதால் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக ட்ரூடோ முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று இரவு பேட்டி அளித்த ட்ரூடோ, ‘‘கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அடுத்த தேர்தலில் நான் போட்டியிடவும் மாட்டேன். கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்’’ என்றார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை வரும் 24ம் தேதி வரை ஒத்திவைக்கவும் அவர் கவர்னர் ஜெனரலிடம் வலியுறுத்தி உள்ளார். அடுத்த தலைவர் குறித்து லிபரல் கட்சியின் தேசிய செயற்குழு கூடி முடிவு எடுக்கும். ஒருவேளை கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டால், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடா அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. ட்ரூடோ பதவி விலகுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து கனடா டாலர் மதிப்பு நேற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
The post கட்சி தலைவர் பதவியிலிருந்து கனடா பிரதமர் ட்ரூடோ ராஜினாமா: எதிர்ப்பு வலுத்ததால் திடீர் முடிவு appeared first on Dinakaran.