இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார் திருவள்ளூர் மாவட்டத்தில் 35,31,045 வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்கள் 53,468 பேர் அதிகம்


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் நேற்று வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் 53,468 பேர் அதிகமாக உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025ன் படி வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த 29.10.24 முதல் 28.11.2024 வரை வரப்பெற்ற 1 லட்சத்து 49 ஆயிரத்து 400 விண்ணப்பங்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 83 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மீதமுள்ள 3,317 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் இறுதி வாக்காளர் பட்டியல் 2025ஐ மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3,699 வாக்குச் சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 17 லட்சத்து 38 ஆயிரத்து 395 பேரும், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 91 ஆயிரத்து 702 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 787 பேரும் என மொத்தம் 35 லட்சத்து 31 ஆயிரத்து 45 பேர் உள்ளனர்.

இதில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 53 ஆயிரத்து 468 பேர் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 1.4.25, 1.7.25 மற்றும் 1.10.25 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய காலாண்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் 6.1.2025 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்கள் அளிக்கலாம். மேலும் //voters.eci.gov.in என்ற இணையதளத்திலும், Voter helpline App மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

* 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:

தொகுதி ஆண்கள் பெண்கள் மாற்று பாலினத்தவர் மொத்தம்
* கும்மிடிப்பூண்டி 1,36,912 1,44,931 40 2,81,883
* பொன்னேரி (தனி) 1,30,462 1,37,555 33 2,68,050
* திருத்தணி 1,38,048 1,42,626 32 2,8,0706
* திருவள்ளூர் 1,31,765 1,38,857 40 2,70,662
* பூந்தமல்லி 1,89,066 1,97,677 80 3,86,823
* ஆவடி 2,26,653 2,33,663 92 4,60,408
* மதுரவாயல் 2,21,230 2,20,320 119 4,41,669
* அம்பத்தூர் 1,83,234 1,85,337 81 3,68,652
* மாதவரம் 2,40,773 2,45,645 118 4,86,536
* திருவொற்றியூர் 1,40,252 1,45,252 152 2,85,656

The post இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார் திருவள்ளூர் மாவட்டத்தில் 35,31,045 வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்கள் 53,468 பேர் அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: