திருத்தணி பகுதியில் கல்குவாரிகளில் டிரோன் சர்வே

திருத்தணி: திருத்தணி பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் டிரோன் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கல்குவாரிகளில் உள்ள கனிமவளத்தை அளவைவிட கூடுதலாக வெட்டி எடுத்து அத்துமீறி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், தமிழக அரசு அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணித்து வருகிறது. இவை டிஜிட்டல் சர்வே, கனிம மேலாண்மை முறை, டிரோன் சர்வே உள்ளிட்ட அதிநவீன முறைகளில் கண்காணிக்கப்படுகிறது.

இதில், திருத்தணி அருகே, சூரிய நகரம் ஊராட்சியில், எல்லம்பள்ளி பகுதியில் உள்ள 2 கல்குவாரிகளில் கனிமவளத்துறையினர் நேற்று டிரோன் மூலம் சர்வே மேற்கொண்டனர். சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 2022 முதல் 2027ம் ஆண்டு வரை என 5 ஆண்டுகளுக்கு கல்குவாரி குத்தகை உரிமம் எடுத்து குவாரியை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த குவாரியில் சதீஷ்குமார் குறிப்பிட்ட அளவை விட அதிக ஆழத்தில் கற்களை வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்வதாகவும், இதனால், சூர்யநகரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கனிமவளத்துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

The post திருத்தணி பகுதியில் கல்குவாரிகளில் டிரோன் சர்வே appeared first on Dinakaran.

Related Stories: